தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 படுக்கையுடன் ஒமிக்ரான் தனி வார்டு

தூத்துக்குடி, டிச.5: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதியுடன் கூடிய ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில கொரோனா  தொற்றுக்கு 4பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் துவங்கி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைவில் ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு கூறுகையில், தற்போது வெளிநாட்டில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம் வழியாக வெளிநாட்டினர் வர வாய்ப்புள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதியுடன் கூடிய ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.    

Related Stories:

More