×

கடலூர் செம்மண்டலம் பகுதியில் முதலை புகுந்ததாக வதந்தி பரவியதால் பரபரப்பு

கடலூர்,டிச. 5: கடலூர் செம்மண்டலம் பகுதியில் முதலை புகுந்ததாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடகிழக்கு பருவ மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு உள்ளிட்டவைகள் புகுந்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் நேற்று கடலூர் செம்மண்டலம் அருகே உள்ள ராஜகவி நகர் பகுதியில் முதலை ஒன்று புகுந்ததாக அப்பகுதி பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, உடும்பு ஒன்று சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், இது குறித்து வனத்துறையிடம் கேட்டறிந்தார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை பகுதியில் 8 அடி கொண்ட முதலை ஒன்று புகுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Cuddalore Red Zone ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது