கொரோனா தடுப்பூசி போடும் முகாம்

பண்ருட்டி, டிச. 5: தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கொரோனாவிலிருந்து பொது மக்களை காப்பாற்ற அனைத்து கிராம பகுதிகளில் தடுப்பு ஊசி போடும் முகாம் தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆலோசனை படி நெய்வேலி சட்ட மன்ற‌ உறுப்பினர் சபா ராஜேந்திரன் அறிவுறுத்தலின் படியும் பண்ருட்டி ஒன்றியம் சொரத்தூர் ஊராட்சியில் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. பண்ருட்டி ஒன்றிய குழுத்தலைவர் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார். இதில் சொரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஜனார்த்தனன் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 

Related Stories:

More