தருமை ஆதினம், அமைச்சர்கள் பங்கேற்பு நம்பியாண்டார் நம்பி கோயில் கும்பாபிஷேகம்

காட்டுமன்னார்கோவில், டிச. 5: காட்டுமன்னார்கோவில் வட்டம், திருநாரையூர் கிராமத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி உடனுறை, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலுடன் இணைந்த பொல்லாப்பிள்ளையார் அருள்பெற்ற அருள்நிறை நம்பியாண்டார் நம்பி சுவாமிகளின் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வரும் 13ம்தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது. இதைமுன்னிட்டு, 10ம்தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் தேவதா அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை, மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேசபலி நடக்கிறது.

 11ம்தேதி காலை 8.30 மணி முதல் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், காலை 10.30 மணிக்கு மகா பூர்ணாஹீதி தீபாராதனை, மாலை 5.30 மணி முதல் மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரஷ்ஷாபந்தம், கலாகர்ஷணம், யாக சாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை ஆரம்பம், இரவு 9 மணிக்கு மகா பூர்ணாஹீதி, தீபாராதனை நடக்கிறது. 12ம்தேதி காலை 8 மணி முதல் இரண்டாம் காலயாக பூஜை ஆரம்பம், பகல் 11.30 மணிக்கு பூர்ணாஹீதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை ஆரம்பம், இரவு 9 மணிக்கு மகா பூர்ணாஹீதி, தீபாராதனை நடக்கிறது.

 13ம்தேதி நான்காம் காலயாக பூஜை ஆரம்பம், சுவாமிக்கு ரஷ்ஷாபந்தனம், பர்சாகுதி, காலை 9.15க்கு மகா பூர்ணாஹீதி தீபாராதனை, காலை 9.40 மணிக்கு கடங்கள் புறப்பாடு, காலை 10 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10.30 மணிக்குள் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை, திருவட்பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதில் தருமை ஆதினம் குருமகாசன்னிதானம், அமைச்சர்கள் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ கணேசன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ மற்றும் ஆட்சியர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.

Related Stories: