கடலூர் 35வது வார்டு பகுதியில் 1,200 குடும்பங்களுக்கு ஐயப்பன் எம்எல்ஏ நிவாரணம்

கடலூர், டிச. 5:  பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள திமுகவினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து கடலூர் மாநகராட்சி 35வது வார்டு சாலக்கரை, ஏணி காரன் தோட்டம், சிவானந்தபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 1200 குடும்ப அட்டைதாரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டும் அரிசி, பிரட், பிஸ்கட் போன்ற நிவாரண பொருட்களை கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ வழங்கினார்.

அரிமா சங்கத் தலைவர் தினகரன், சரத் தினகரன் ஆகியோர் ஏற்பாடு செய்த, நிகழ்ச்சியில் திமுக மாவட்ட மாணவரணி செயலாளர் நடராஜன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் தமிழரசன், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், நகர துணைச் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அஞ்சாப்புலி, மாவட்ட பிரதிநிதி கோவலன், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் சித்ராலயா ரவிச்சந்திரன், தமிழ்வாணன், சாலக்கரை ஊர் பஞ்சாயத்தார் ஸ்டாலின், சுரேஷ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், முருகானந்தம், மீனா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் எல்சா, அஞ்சுகம், தொமுச முருகன், ராஜி, ரோட்டரி ராசன், கிளைச் செயலாளர்கள் தில்லை ராஜா, முருகன், ரகு, கோவிந்த், அரிமா சங்கத் தலைவர் ராஜா, சன்பிரைட் பிரகாஷ், பாசறை கண்ணன், பாஸ்கர், நட்ராஜ், பிரேம், யுவராஜ், மனோஜ், சங்கர், மருதன், கமல் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More