பெண்ணாடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

பெண்ணாடம், டிச. 5: பெண்ணாடம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். முகாமில் நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன் தலைமையில் மருத்துவர்கள் ஜெனிபர், செல்லப்பெருமாள் ஆகியோர் கொண்ட குழுவினர் சுமார் ஆயிரத்து 50 நபர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும், சுமார் 50 நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் போட்டனர்.பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், திமுக நகர செயலாளர் குமரகுரு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More