காரைக்குடி டாஸ்மாக் கடைக்குள் புகுந்தது பாம்பு

காரைக்குடி, டிச. 5: காரைக்குடி 100 அடி ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைக்குள் நேற்று மாலை சாரை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கடை சூபர்வைசர் சிவக்குமார் உடனே காரைக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். 

நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் வந்து கடையில் சரக்கு பெட்டிகள் இடையே பதுங்கி இருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Related Stories:

More