×

சுருளி அண்ணாமலையார் கோயிலில் அன்னதான மடம் திறப்பு விழா

கம்பம், டிச. 5: சுருளித் தீர்த்தம் பண்டாரத் துறையில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையார் வட்ட கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அண்ணாமலையார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக அண்ணாமலையாருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட பதினெட்டு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் மடம் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் தமிழ்நாடு வன்செயல் (குண்டாஸ்) தடுப்பு அமர்வு உறுப்பினருமான ரகுபதி கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதி அண்ணாமலையார் குருகுலம், ஆதி அண்ணாமலையார் வட்ட கோயில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் குழு ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : Annadana Madam ,Suruli Annamalaiyar Temple ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...