பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மனநலம் குன்றியவர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா

பெரியகுளம், டிச. 5: பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதை தடுப்பு கமிட்டி விழிப்புணர்வு மற்றும் மனநலம் குன்றிய ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவிக்கரமாக செயல்பட்ட பொதுநல அமைப்பினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றுமு சுகாதாரத்துறை இணை இயக்குநர் லெட்சுமணன் தலைமை வகித்தார். நீதிபதி ராஜ்மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

விழாவில், கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அளவில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனநலப் பிரிவுக்கு, நன்கொடை மற்றும் உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மரியாதை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நீதிபதி ராஜ்மோகன் வழங்கினார்.

இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், டாக்டர் திருமுருகன், தேனி ஈசிஆர்சி மருத்துவ பிரிவு டாக்டர் ராஜேஸ், நகர்நலச்சங்க செயலாளர் அன்புக்கரசன், பெரியகுளம் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜவேலு, பெரியகுளம் நகர் வளர்ச்சிக்கழக தலைவர் மணி கார்த்திக், நேசம் தொண்டு நிறுவன நிர்வாகி முருகன், செட் பவுண்டேசன் நிர்வாகி நித்தியானந்தம் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: