×

வத்தலக்குண்டு மத்திய கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம்

சின்னாளபட்டி, டிச. 5:வத்தலக்குண்டு மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக துணைப் பதிவாளர் முத்துக்குமார் மற்றும் மத்திய வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அன்புக்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் பேசியதாவது:  ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமும் பயிர்க்கடன் மட்டும் ரூ 5.00 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கும், கடன் உதவி கேட்பவர்களுக்கும் முறையான ஆவணங்களை பெற்று கடன் வழங்க வேண்டும். இதுபோல அரசு திட்டங்களான  மாற்றுத்திறனாளிகள் கடன், கைம்பெண்கள் கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ கடன்கள், மகளிர் சுய உதவிக் குழுக் கடன், மத்திய காலக்கடன் போன்ற கடன்களை வழங்க தாமதம் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.

இதில், வத்தலகுண்டு, சித்தையன் கோட்டை, கன்னிவாடி, திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் ஆகிய 5 சரகம் மற்றும்  34 சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Wattalakundu Central Cooperative Bank ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...