×

கன்னிவாடியில் ரூ.6 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் அமைச்சருக்கு மக்கள் நன்றி

சின்னாளபட்டி, டிச. 5:ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடியில் முறையான பேருந்து வசதி இல்லாததால் மதுரையில் இருந்து கோவை, பழனி செல்லும் பேருந்துகள் கன்னிவாடி வழியாக செல்லாமல் திண்டுக்கல்-பழனி சாலை வழியாக சென்று வந்தன. தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி அமைந்தால் கன்னிவாடியில் நவீன வசதியுடன் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி சுமார் ரூ.6 கோடி மதிப்பில் காவலர் குடியிருப்பு அருகே நவீன வசதியுடன் பேருந்து நிலையம் அமைய உள்ளது. இதற்காக அப்பகுதியில் இருந்த கருவேலம் மரங்கள் மற்றும் புதர்செடிகளை வனத்துறையினர் மற்றும் பேரூராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி தலைமையில், கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம் மற்றும் நகர நிர்வாகிகள் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தங்கள் பகுதியில் நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கன்னிவாடி வட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Minister ,Modern ,Bus ,Station ,Cannywadadam ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...