திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ.செல்வராஜ் ஆய்வு

திருப்பூர், டிச. 5:  திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டுக்கு உட்பட்ட பெரிச்சிபாளையம்- வெள்ளியங்காடு செல்லும் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடி வந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து புதிதாக அங்கு சாக்கடை கால்வாய் அமைக்க எம்.எல்.ஏ. செல்வராஜ் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில், அப்பகுதிக்கு நேற்று நேரில் சென்ற எம்.எல்.ஏ. செல்வராஜ், சாக்கடை கால்வாய் மேல்மட்ட பாலத்தின் பணிகளை துவக்கி வைத்து, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் திமுக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக., மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், தினேஷ்குமார், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் பாலசுப்பிரமணி, திமுக பிரமுகர் தமிழ்செல்வம்  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories:

More