×

வெல்லம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர், டிச.5:   வெல்லத்தை வெளிர் நிறமாக்குவதற்கு சிலவகை வேதியல் பொருட்களை பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள வெல்லம் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், வெல்லம் தயாரிப்பு நிறுவனங்கள், வெல்லத்தை வெளிர் நிறமாக்குவதற்கு வேதியல் பொருட்களான சோடியம் பை சல்பேட், கால்சியம் கார்பனேட், சல்பர் டை ஆக்சைடு, சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள வெல்லம் தயாரிப்பு நிறுவனங்களில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகிறோம்.வெல்லம் தயாரிப்பாளர்கள், மேற்கண்ட வேதிப்பொருட்களையோ அல்லது மைதா, சர்க்கரை போன்ற பொருட்களையோ வெல்லத்துடன் கலக்கக் கூடாது.

உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-ன் படி வெல்லம் தயார் ெசய்து விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல் செயலில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அடர் மஞ்சள், வெளிர் மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் உள்ள வெல்லத்தில் வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். ஆகவே, பொதுமக்கள் வெல்லத்தை வாங்கும்போது, அடர்ந்த அரக்கு நிறத்தில் உள்ளதா? என்பதை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும், என்றார்.

பல்லடம்:  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் பல்லடம் அலுவலர் கேசவராஜ் மற்றும் அத்துறையினர் வெல்லம் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்கள் தரம் குறைபாடு குறித்து புகார்களை வாட்ஸ் அப் எண் 9444042322 என்ற எண்னுக்கு தெரிவிக்கலாம் புகார் தெரிவிப்பர்கள் விபரம் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார்.

Tags : Jaggery Production Companies ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...