×

அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஊட்டி, டிச. 5: ஊட்டி அருகேயுள்ள முத்தோரை அங்கன்வாடி மையம் மற்றும் நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த மையத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரீத் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் வருகை விவரம், குழந்தைகளின் வயதிற்கு ஏற்றவாறு எடை உள்ளதா?, உயரம் சரியாக உள்ளதா? மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உள்ளனரா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

குழந்தைகள் தரமான மற்றும் ஊட்டசத்து மிகுந்த உணவுகளை வழங்க அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து நஞ்சநாடு பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், தரமான முட்டைகள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். ஆய்வின் போது, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : Anganwadi Center ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்