×

கீழநத்தம் வடக்கூரில் கால்நடை மருத்துவ முகாம்

நெல்லை, டிச. 4: நெல்லை கால்நடை பராமரிப்புத் துறை, நடமாடும் கால்நடை மருந்தகம் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம், கீழநத்தம் வடக்கூரில் நடந்தது. முகாமை பஞ்சாயத்து தலைவர் அனுராதா தொடங்கி வைத்து கால்நடைகளுக்கான தாது உப்புக் கலவைகளை வழங்கினார். முகாமில் காய்ச்சல், வாய்ப் புண், கால்புண், மடி வீக்கம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மாடுகளுக்கு சினை ஊசி, சினைப் பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தமாக 200  ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் 50 கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை  மருத்துவர் முகமது அயூப் அலி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் லாசர் செய்திருந்தனர்.

Tags : Veterinary Camp ,Lower North ,
× RELATED காணியம்பாக்கம் ஊராட்சியில் கால்நடை...