×

மழையால் நீர்வரத்து அதிகரிப்பு முல்லைப் பெரியாற்றில் குளிக்க தடை

கம்பம், டிச. 4: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 141. 85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,954 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 2,300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

3இந்நிலையில், வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளில் ஆபத்தை உணராமல் முல்லைப் பெரியாற்றில் இறங்கி குளிக்கின்றனர். இதனால், சில நேரங்களில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு கம்பம் தெற்கு காவல்நிலையம் சார்பில், முல்லைப் பெரியாற்றில் குளிப்பதற்கும், இறங்குவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் சுழற்சி முறையில் முல்லைப் பெரியாற்று பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Mullaperiyar ,
× RELATED முல்லைப் பெரியாறு: கேரள அரசு கட்டும்...