விளத்தூரில் மருத்துவ முகாம் முருகேசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பரமக்குடி, டிச.4: பரமக்குடி அருகே உள்ள விளத்தூர் கிராமத்தில், கிராம ஊராட்சி சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் நடைபெற்றது.  இந்த முகாமினை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தலைமையேற்று துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் அருளானந்தம் வரவேற்றார். பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பரமக்குடி சுகாதார துணை இயக்குனர் கலைச்செல்வி, வட்டார மருத்துவர் தவமுருகன், பாம்பூர் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில், பொது மருத்துவம், கண் சிகிச்சை, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன், பரமக்குடி நகர பொறுப்பாளர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் அருளானந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுகாதாரத்துறையினர், ஊரக உள்ளாட்சி துறை பணியாளர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்துகொண்டனர்.

இறுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காந்தி நன்றி கூறினார்.

Related Stories: