கொடைக்கானலில் குடிநீர் தேக்கங்கள் நிரம்பியது

கொடைக்கானல், டிச. 4: கொடைக்கானலுக்கு குடிநீர் ஆதாரமாக 2 நீர்த்தேக்கங்கள் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ளது. அதில் ஒன்று ஆங்கிலேயர்  காலத்தில் அமைத்த குடிநீர் தேக்கம். மற்றொன்று திமுக ஆட்சியில் அமைத்த  மனோரத்தினம் சோலை குடிநீர் தேக்கம் ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் அமைத்த  நீர்த்தேக்கத்தில் இருந்துதான் கொடைக்கானல் நகர் பகுதி முழுவதும் குடிநீர்  விநியோகம் நடைபெறுகிறது. கடந்த வாரம் பெய்த கனமழையால் இக்குடிநீர் தேக்கம்  21 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல் மனோரத்தினம் சோலை அணை தனது 34  அடி முழு கொள்ளளவை எட்டியது.

குண்டாறு குடிநீர் திட்டத்தில் இருந்தும்  கூடுதலாக தண்ணீர் வருவதால் கொடைக்கானல் நகரிலுள்ள 24 வார்டுகளுக்கும்  வாரத்தில் 2 நாட்கள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது  வாரத்திற்கு 3 நாட்கள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. விரைவில்  நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருவதாக நகராட்சி ஆணையாளர் நாராயணன் தெரிவித்தார்.

Related Stories:

More