கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட இருளர் இன மக்கள்

விருத்தாசலம், டிச. 4: விருத்தாசலம், திட்டக்குடி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட இறையூர், பெண்ணாடம், பாசிகுளம், கிளிமங்கலம், ஓலையூர், வண்ணான்குடிகாடு, பேரையூர், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி கார்மாங்குடி, சாவடிகுப்பம், சாத்தமங்கலம், சின்னவடவாடி, மங்கலம்பேட்டை, பரவலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் விருத்தாசலம் அடுத்த தாழநல்லூர் பகுதியில் பட்டா வழங்கக்கோரி 500க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் இன மக்கள் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன் தலைமையில் அனைத்து மக்கள் பழங்குடியினர் இருளர் கட்சித் தலைவர் சின்னப்பன் முன்னிலையில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்டவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் இன மக்கள் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: