×

சுகாதார சீர்கேடுகளை தடுக்க கடலூர் மாநகரில் சிறப்பு தூய்மை பணி திட்டம்

கடலூர், டிச. 4: கடலூர் மாநகராட்சி பகுதியில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான நகர் பகுதியைச் சூழ்ந்துள்ள சுகாதார சீர்கேடுகளை அகற்றும் வகையில் மெகா தூய்மை திட்டத்தை ஐயப்பன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். கடலூர் மாநகரில் வரலாறு காணாத வகையில் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நகர்ப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் மாநகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது இதற்கிடையே தற்போது சில நாட்களாக மழை ஓய்ந்துள்ள நிலையில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் மெகா தூய்மை திட்டம் அனைத்து சுகாதார பணியாளர்கள், மாநகராட்சி, இதர அலுவலர்கள் பங்கேற்புடன் துவங்கப்பட்டது. கடலூர் மாநகராட்சி துறைமுகம் பகுதி, மோகன் சிங் தெரு, சோனகர் தெரு, சஞ்சீவிராயன் தெரு, இருசப்பன் தெரு, பள்ளிவாசல் தெரு, சங்கரன் தெரு, சராங்கு தெரு, சோவையன் தெரு, மம்சா பேட்டை, கிஞ்சம் பேட்டை, மதினாபள்ளிவாசல் தெரு, மற்றும் பல பகுதிகள் முழுவதும் பொக்லைன் இயந்திரம் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கொண்டு சிறப்பு தூய்மை பணி நடந்தது. இதனை கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். அப்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : Cuddalore ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!