திருப்பூர் அரசு மருத்துமனையில் தயார் நிலையில் ஒமிக்ரான் வார்டு

திருப்பூர், டிச.4:  திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வீரியமிக்க ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால், உலக முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் பரவியதையடுத்து, ஒன்றிய, மாநில அரசுகள், இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வெளிநாட்டு பயணிகள் மூலம் பரவுவதை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories:

More