பர்கூர் மலைப்பகுதியில் கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

அந்தியூர்,டிச.4: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி பெஜலட்டியில் தனியார் கல்குவாரி உள்ளது. இங்கிருந்து கடந்த இரண்டு நாட்களாக டிப்பர் லாரிகள் மூலம் கிரானைட் கல் தாமரைக்கரை, பர்கூர்,கர்கேகண்டி வழியாக கொண்டு செல்லப்படுகிறது. மழையினால் ரோடுகள் பழுதடைந்துள்ள நிலையில் அதிக எடையிலான கிரனைட் கற்கள் லாரியில் ஏற்றிச் செல்வதால் சாலைகள் மேலும் பழுதாகி வருவதாகக்கூறி அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமரைக்கரை அருகே உள்ள பாறைமேடு என்ற இடத்தில் லாரியை சிறை பிடித்தனர். தகவலறிந்த பர்கூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய அரசு அனுமதியுடன் கிரானைட் கற்களை கர்கேகண்டி, கொளத்தூர் வழியாக கொண்டு செல்வதாகவும் கூறினர். பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனையடுத்து லாரி விடுவிக்கப்பட்டது.

Related Stories:

More