×

ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை

ஈரோடு,டிச.4: ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், பங்களாதேஷ், மொரீசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இருப்பின் உடனடியாக அருகிலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாவட்ட ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (வார் ரூம்) 80569-31110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஒமிக்ரான் உருமாறிய கொரோனா தொற்றின் பாதிப்புகளை தடுக்க ,கொரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இன்று (4ம் தேதி) 13 வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமானது 467 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.  இம்முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி