×

புதுகை அருகே அரிதான நினைவுத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு புதுகையில் 81 மாற்று திறனாளிகளுக்கு ரூ.43.50 லட்சம் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை, டிச. 4: புதுக்கோட்டையில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது; இவ்விழாவில் 81 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக்கருவி, கற்றல் உபகரணங்கள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுடன் சமுதாயத்தில் அனைவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவும், மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தில் ஓர் அங்கம் என்பதை உணர்த்தும் வகையிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தனித்திறன் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது தனித்திறமையை கண்டறிந்து முன்னேற வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசும் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருவதுடன், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசின் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் ரேணுகா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரிபுரசுந்தரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரேம்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pudukai ,
× RELATED புதுகை வம்பன் அருகே மனநலம் பாதித்த...