×

திருவிசநல்லூர் கிராமத்தில், இன்று சிதம்பரேஸ்வரர் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு யாகம்

கும்பகோணம்,டிச.4: கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூர் கிராமத்தில் சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் சுவாமி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் தனி சன்னதி கொண்டு பிரித்திங்கரா தேவி ஐந்து முகத்துடன் 12 அடி உயரத்தில் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியாக அருள்பாலிக்கிறார். கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (4ம் தேதி) பகல் 12 மணிக்கு மிக சிறப்பான முறையில் நிகும்பலா யாகம், மிளகாய் யாகம், பட்டுப்புடவை யாகம் நடைபெற உள்ளது. முன்னதாக இவ்வாலயத்திலுள்ள குபேர விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகளும் சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகிறது.

சிறப்பான யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு விரைவில் திருமணம் நல்ல உத்தியோகம், பொருளாதார மேம்பாடு, வியாபார லாபம், உத்யோக உயர்வு, போட்டி, பொறாமை தோஷங்கள் விலகும் என்பதால் எல்லா பகுதிகளிலிருந்தும் தமிழகத்தில் அனைத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அருள் பெறுவார்கள் ஆலய ஸ்தாபகர் கணேஷ்குமார் குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள் நடைபெற உள்ளது. விழாக்குழு நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags : Thiruvisanallur ,Chidambaraswarar Swami Temple ,
× RELATED கிணற்றில் பொங்கும் காசி கங்கை