×

போக்குவரத்து பாதிப்பு மழைநீரை அகற்றக்கோரி ஓமியோபதி கல்லூரியில் போராட்டம்

திருமங்கலம், டிச. 3: திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி கல்லூரியும், மருத்துவமனையும் கல்லூரியும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 350 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மறவன்குளம், குதிரைசாரிகுளம் கண்மாய்கள் நிரம்பிய வெளியேறிய மழைநீர், ஓமியோபதி கல்லூரி வளாகத்தை சுற்றி தேங்கியுள்ளது. இதனால், கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை என முதல்வர் கார்த்திகேயன் அறிவித்தார். இதை ஏற்க மறுத்த மாணவர்கள் மழைநீரை அகற்றி, கட்டிடங்களை பராமரிக்கக்கோரி நேற்று கல்லூர்யில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.மாணவ, மாணவியர் கூறுகையில், ‘கல்லூரி மற்றும் விடுதி கட்டிடங்கள் பராமரிப்பில்லாமல் உள்ளன. கல்லூரி வளாகத்தை கண்மாய் நீர் சூழ்ந்துள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர். மாணவ, மாணவியருடன் திருமங்கலம் ஆர்டிஓ அனிதா, தாசில்தார் அனந்தகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் கல்லூரி கட்டிட வளாகத்தை ஆய்வு செய்தனர். மேலும், மாணவ, மாணவியரை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். ஓமியோபதி கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.2 கோடியில் கட்டிடப் பணிகளை தொடக்க உள்ளோம். கண்மாய் நீர் வடியும் வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்துள்ளோம்’ என்றார்.

Tags : College of Homeopathy ,
× RELATED திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் நேரடி வகுப்புகள் துவக்கம்