திண்டுக்கல்லில் 2 ஆண்டுகளுக்கு பின் கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்கத்தேர் உலா

திண்டுக்கல், டிச. 3: தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோயில் திருவிழாக்கள் நடத்த பல்வேறு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது தொற்று குறைந்து வருவதால்,  கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் காரணமாக, திண்டுக்கல்லில் உள்ள பிரசித்தி  பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மன் தங்கத்தேரில் உலா வரும்  நிகழ்ச்சி 2 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு  அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில்  தங்கத்தேரில் அம்மன் உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தங்கத்தேரின் வடம் பிடித்து இழுத்தும், அம்மனை தரிசனம் செய்தும்  மகிழ்ந்தனர். இனி தினந்தோறும் தங்கத்தேர் உலா நடைபெறும் என கோயில்  நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More