நேஷனல் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்

கோவில்பட்டி, டிச.3:கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம், தேர்தல் கல்விக்குழு இணைந்து 01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் கடந்த நவ.13,14,27,28 ஆகிய தேதிகளில் நடந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம் செய்ய நடந்த முகாமில் பெயர் சேர்த்தலுக்காக 100க்கு மேற்பட்ட மாணவர்களிடமிருந்தும், இடப்பெயர்ச்சி மற்றும் இரட்டைப்பதிவு ஆகிய காரணங்களுக்காக 10 மாணவர்களிடமிருந்து பெயர் நீக்கவும், ஏற்கனவே உள்ள பதிவுகளில் திருத்தங்கள் செய்ய 20 மாணவர்களிடமிருந்தும், ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் செய்யக்கோரி 20 மாணவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய ஆவண நகல்களுடன் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் அனைவரும் 100 சதவிதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் அருணாசலம், கல்லூரி இயக்குனர் சண்முகவேல், முதல்வர் கே.காளிதாசமுருகவேல் வழிகாட்டுதலின்படி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள், தேர்தல் கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

More