×

கொங்கராயகுறிச்சியில் பட்டா மாற்றம் சிறப்பு முகாம்

செய்துங்கநல்லூர், டிச.3:தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி வைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் வைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.முகாமில் 50க்கும் மேற்பட்ட பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் வெள்ளத்தாய், கொங்கராயகுறிச்சி விஏஓ அருணா, கிராம நிர்வாக உதவியாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kongarayakurichi ,
× RELATED மாநில நீச்சல் போட்டிக்கு கொங்கராயக்குறிச்சி பள்ளி மாணவர் தேர்வு