திக வீரமணி பிறந்த நாள் மரக்கன்றுகள் நடும் விழா

பரமத்திவேலூர், டிச. 3: பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூரில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிறந்த நாளையொட்டி, தந்தை பெரியார் அறக்கட்டளை தலைவர் பொத்தானூர் சண்முகம் தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், 89 மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து நடந்த கருத்தரங்கில், நாமக்கல் மாவட்ட திக. துணை தலைவர் அசேன், பேரூர் திமுக செயலாளர் கருணாநிதி, சாமிநாதன், சண்முகம், மதிமுக நகர செயலாளர் இளங்கோவன், அன்பழகன், கரூர் வேர்ப்பலா அழகரசன், நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வக்கீல் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பொத்தனூர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

Related Stories: