×

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 1217 கனஅடி

கிருஷ்ணகிரி, டிச.3: கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1217 கனஅடியாக உள்ளது. பெங்களூரு அருகேயுள்ள நந்திமலை, தென்பெண்ணை ஆற்றின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த 2 நாட்களாக 908 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 748 கனஅடியாக சரிந்துள்ளது. அந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1443 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1217 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து 1280 கனஅடி தண்ணீர் வீதம் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.55அடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : KRP Dam ,
× RELATED கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 350 கனஅடி