×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

பண்ருட்டி, டிச. 3: பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா உத்தரவின்பேரில்  காடாம்புலியூர் மற்றும் முத்தாண்டிகுப்பம் போலீசார், அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(55), தோப்புக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகவேல்(49) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது