உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் உறுதிமொழி ஏற்பு

திட்டக்குடி, டிச. 3:    கடலூர் மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், திட்ட மேற்பார்வையாளர் கதிரவன் ஆகியோரின் ஆணைக்கிணங்க திட்டக்குடி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் திட்டக்குடி தலைமை மருத்துவர் (பொ) செல்வேந்திரன், மருத்துவர்கள் பாலமுருகன், ரம்யா, யாசின், பத்மவைஷ்ணவி, ஆனந்தி, சோபானந்தம், கோமதி, விஜய்சங்கர், செவிலியர்கள் நாகராணி, கவிதா, குப்பு, கூட்டு மருத்துவ சிகிச்சை மைய செவிலியர் தபிதாஞானம், நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி, ஆய்வக நுட்பணர்கள் வேல்முருகன், ஜான்சிராணி, குமார், மருந்து ஆளுநர்கள் தண்டபாணி, சங்கர் முருகானந்தம், உமா உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: