பண்ருட்டி நகராட்சி பகுதியில் வாடகை பாக்கி வசூல் செய்யும் பணி தீவிரம்

பண்ருட்டி, டிச. 3: பண்ருட்டி நகராட்சி சார்பில், நூற்றுக்கணக்கான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், ரூ.1 கோடி அளவில் நகராட்சிக்கு கடைக்காரர்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.  இதையடுத்து நகராட்சி ஆணையர் அறிவுரையின்படி வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் கடந்த ஒரு வார காலமாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கி வசூல் செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். வாடகை பாக்கி செலுத்தாத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தனர். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை, சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: