×

42 லட்சம் வாடகை பாக்கி 5 கடைகளுக்கு சீல் வைப்பு

கடலூர், டிச. 3: வரி பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.  கடலூர் மாநகராட்சி பகுதியில், பல்வேறு நிலைகளில் ரூ.67 கோடி அளவிற்கு வரி, வாடகை உள்ளிட்டவைகள் வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே கடலூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற விஸ்வநாதன் வரி மற்றும் வாடகை பாக்கி வசூல் செய்ய நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று பாரதி சாலையில் உள்ள ஐந்து கடைகள் ரூ.42 லட்சம் வாடகை பாக்கி நிலுவையில் இருந்த நிலையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், அசோகன் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கடை தரப்பினரிடம் வாடகை பாக்கி கேட்டுள்ளனர்.

வாடகை பாக்கி செலுத்தாத நிலையில் அதிரடியாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் கடைக்காரர்கள், மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில் தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வாடகை பாக்கி செலுத்திய பின்னர் சீல் அகற்றப்படும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு