×

மணமேல்குடி அருகே மஞ்சக்குடியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

அறந்தாங்கி, டிச.3: மணமேல்குடி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மஞ்சகுடியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியினை வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம், மஞ்சக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமாமிர்தம் முன்னிலை வைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் அனைவரையும் வரவேற்றார். இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் எவ்வாறு கல்வி கற்பது மற்றும் தன்னார்வலர்களை இல்லம் தேடி கல்வி நிகழ்வில் பதிவு செய்வது குறித்தும் ஆடல் பாடல்கள் ஒயிலாட்டம் பறையாட்டம் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளூர் பிரதிநிதிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Education Project Awareness Art Show ,Manjakudi ,Manamelkudi ,
× RELATED மணமேல்குடி தாலுகாவில் மரக்கன்று நடும் விழா