திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

திருச்செந்தூர், டிச.2: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து, ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முத்துகிருஷ்ணராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அடிப்படை தேவைக்கான 26 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றிய கவுன்சிலர் வாசுகி, செல்வம், ராமலெட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிகார்த்திகேயன், அமுதா, தேவிகா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெயக்குமார், அலுவலக உதவியாளர்கள் அரிகரன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Related Stories:

More