குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

சாத்தான்குளம், டிச. 2: சாத்தான்குளம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. யூனியன் சேர்மன் ஜெயபதி  தலைமை வகித்தார். யூனியன் ஆணையாளர் ராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் களபணியாளர் செல்வி பிரான்சிஸ் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். கூட்டத்தில் பள்ளி மாணவிகள், குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்பவர்களை கண்டறிவது, குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல்  விழிப்புணர்வு ஏற்படுத்துவது என குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதில் வட்டார கல்வி அலுவலக இளநிலை உதவியாளர்கள் காந்த், சுவின் அகஸ்டின், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலமேலு, சின்னத்துரை உள்ளிட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர், தொண்டு நிறுவன பணியாளர்கள், குழந்தை பாதுக்காப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: