×

மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினத்தில் சிறப்பு பட்டா திருத்த முகாம்

மன்னார்குடி, டிச. 2: மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டிணம் ஊராட்சியில் நடந்த சிறப்பு பட்டா திருத்த முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு திருத்தங்கள் தொடர்பாக 124 மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் கொள்கையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசா யி ள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளு க்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில், வருவாய் கோட்டாட்சியர் அழ;அழகர்சாமி வழிகாட்டுதலின் பேரில், தாசில்தார் ஜீவானந்தம் தலைமையில் மன்னார்குடி வருவாய் சரகத்தில் சிறப்பு பட்டா திருத்த முகாம்கள் நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, மன்னார்குடி அடுத்த மகாதேவப்பட்டிணம் ஊராட்சி யில் சிறப்பு பட்டா திருத்த முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மண்டல துணை தாசில்தார் நாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய கவுன்சிலர் பாரதிமோகன், ஊராட்சி மன்ற தலைவர் மரகதம்ராமையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், எராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, நிலத்தின் சர்வே எண், துணை கோட்ட எண்ணில் தவறான பதிவுகளை நீக்குதல், நீட்டிக்கப் பட்ட திருத்தம், பட்டாதாரரின் பெயர் திருத்தம், பட்டாதாரரின் தந்தை பெயர், பாதுகாவலரின் பெயர்களில் திருத்தம், நில உரிமையாளரின் உறவுமுறை தொடர்பான திருத்தம், காலியாக உள்ள பத்திகளில் திருத்தம், பட்டாதாரரின் பகுதி, பெயர் அருகே உள்ள பட்டாதாரரின் பெயரில் இருப்பதை திருத்துதல் உள்ளிட்ட சிறிய அளவிலான பிழைகள் குறித்து 124 மனுக்களை அளித்தனர்.

அதில் தகுதியுள்ள மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு கணினி முறையில் பட்டா நகல்கள் பயனாளிகளுக்கு வழங்க படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.முகாமில், வருவாய் ஆய்வாளர் ெலனின், சரக நில அளவையர் சுரேஷ், விஏஓக்கள் மணிகண்டன், தமிழரசன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.

Tags : Patta Edit Camp ,Mahadadeattinam ,Mannarakudi ,
× RELATED அருப்புக்கோட்டை, மன்னார்குடி...