×

திருவாரூர் மாவட்டத்தில் 1027 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.21.26லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திருவாரூர், டிச.2: திருவாரூர் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் ஆயிரத்து 27 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் ஆகியோர் வழங்கினர். திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் ஆயிரத்து 27 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறியதாவது, தமிழக அரசு கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பொருட்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைத்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், முதல்வர் இன்றைய தினம்( நேற்றைய தினம்) தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள், சமூகபாதுகாப்பு மற்றும் நலவாரியம் மூலம் 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

அதன்தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் கட்டுமான தொழிலாளர்கள் 818 நபர்களுக்கு ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்திற்கான கல்விநிதி உதவித் தொகைக்கான ஆணையும், 8 நபர்களுக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பில் திருமணம் நிதி உதவித்தொகைக்கான ஆணையும், ஒரு நபருக்கு ரூ.500 மதிப்பில் கண்கண்ணாடி நிதிஉதவித்தொகைக்கான ஆணையும், 28 நபர்களுக்கு ரூ.7லட்சம் மதிப்பில் இயற்கைமரணம் நிதிஉதவித்தொகைக்கான ஆணையும் மற்றும் 172 நபர்களுக்கு ரூ.ஒரு லட்சத்து 72ஆயிரம் மதிப்பில் ஓய்வூதியம் நிதிஉதவித்தொகைக்கான ஆணையும் என மொத்தம் ஆயிரத்து 27 நபர்களுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ சிதம்பரம், தொழிலாளர் உதவிஆணையர் (சமூகபாதுகாப்புதிட்டம்) தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvarur district ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா