நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எம்எல்ஏ ஆய்வு

மன்னார்குடி, டிச. 2:திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் அருகே உள்ள 64, நெம் மேலி மீனம்பநல்லூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் இயங்கும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் எம்எல்ஏ மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அவர் கூறியது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை அதிகாரிகள் துரித படுத்த வேண்டும். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது என்றார்.

Related Stories:

More