தஞ்சை மாவட்டத்தை எச்ஐவி, எய்ட்ஸ் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்

தஞ்சை, டிச.2: தஞ்சை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படாமல் கவனிப்பு மற்றும் ஆதரவு அதிகரிக்கும் விதத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் அதிக தொற்று பெற வாய்ப்புள்ளவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி தொடக்கி வைக்கப்பட்டது. இந்த பேரணி தஞ்சாவூர் ரயில் நிலைய சந்திப்பில் தொடங்கி அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வரை நடைபெற்றது.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 30 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் தொற்று உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும் முதல் கட்ட பரிசோதனையானது 77 அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் ஆகிய இரண்டு மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கூட்டு சிகிச்சை மையத்திற்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. கூட்டு சிகிச்சை பெறுவோருக்கு இலவச சசட்ட ஆலோசனை மற்றும் உதவிகள் கிடைக்க வழி வகைகள் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சீரிய முயற்சியால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே 2015ம் ஆண்டில் 0.30 விழுக்காடு இருந்தபாதிப்பு தற்போது 0.14 விழுக்காடாக குறைந்துள்ளது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களிடையே 2015ம் ஆண்டில் 0.05 விழுக்காட்டில் இருந்து தற்போது 0.02 விழுக்காடாக குறைந்துள்ளது.

எச்.ஐ.விஃஎய்ட்ஸ் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாவட்ட திட்ட மேலாளர் பசுபதீஸ்வரர், சுகாதார இணை இயக்குநர் திலகம், காசநோய் துணை இயக்குநர் மாதவி, நகர சுகாதார அலுவலர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More