தஞ்சையில் பெண் மாயம்: போலீசில் தந்தை புகார்

தஞ்சை, டிச.2: தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு ராம் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திலகவதி (28). இவருக்கும், மதுரையை சேர்ந்த எலக்ட்ரிக் கடையில் பணியாற்றும் சந்திரமோகன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் கோபித்துக்கொண்டு கடந்த 4 மாதம் முன்பு தஞ்சை ராம் நகரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு திலகவதி வந்துள்ளார். இந்நிலையில் தனது தோழியை பார்க்க சென்ற திலகவதி மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம். இதுகுறித்து நாகராஜன் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகவதியை தேடி வருகின்றனர்.

பொறுப்பேற்பு பட்டுக்கோட்டை, டிச.2: பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக சுப்பையன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு தேனி நகராட்சி ஆணையராக இருந்தார். தற்போது பணிமாறுதலில் பட்டுக்கோட்டைக்கு வந்துள்ளார். ஏற்கனவே பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக இருந்த வீரமுத்துக்குமார் தேனி நகராட்சி ஆணையராக பணிமாறுதலில் சென்றுள்ளார்.

Related Stories:

More