ஒரத்தநாட்டில் இல்லம்தேடி கல்வி திட்டம் துவக்கம்

ஒரத்தநாடு, டிச.2: ஒரத்தநாடு ஒன்றியத்தில் பொய்யுண்டார்கோட்டை வடக்கூர் வடக்குக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளருமான ரமேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

அதேபோல் வடக்கூர் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹெலன்பரிமளா, ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் முத்துகலா மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: