தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, பணம் திருட்டு

வல்லம், டிச.2: தஞ்சை அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தஞ்சை மாதாக்கோட்டை ரோடு ஜேம்ஸ் சாவடியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அப்ரோஸ்பேகம். இவர் கடந்த 28ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு மகள் திருமணத்திற்காக மேலத்திருப்பந்துருத்திக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். மறுநாள் 29ம் தேதி திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த அப்ரோஸ்பேகம் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு ஐந்தரை பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.75 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

More