திருமயம் அருகே கடியாப்பட்டியில் மழைக்கால கால்நடை மருத்துவ முகாம்

திருமயம், டிச. 2: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கடியாபட்டி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை தாக்கத்தினால் ஏற்படும் நோய்களுக்காக கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் சத்து ஊசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமை கடியாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர் முருகராஜ் தலைமையில் கால்நடை பராமரிப்பு குழுவினர் கால்நடைகளுக்கு தாது உப்பு கரைசல், குடல் புழு நீக்குவதற்கான மருந்து மாத்திரைகளும் சினைமாட்டிற்கு சத்து ஊசிகளும் செலுத்தினர்.

இதில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்ட நிலையில் உரிமையாளர்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் ஊராட்சி துணைத்தலைவர் போஸ், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி, ஊராட்சி செயலாளர் குமரேசன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: