அன்னவாசல், திருமயம் ஒன்றிய மகளிர் திட்ட குழுக்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி

புதுக்கோட்டை, டிச. 2: புதுக்கோட்டை மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் அங்ககச்சான்றளிப்பு துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் இணைந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற வாழ்வாதார ஒன்றியங்களான அன்னவாசல் மற்றும் திருமயம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சிறந்த முறையில் செயல்படும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய திருவேங்கைவாசல் உற்பத்தியாளர் குழு மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றிய குழிபிறை உற்பத்தியாளர் குழுவில் உள்ள ஆர்வம் உள்ள உறுப்பினர்களுக்கு விதைப் பண்ணை அமைப்பது மற்றும் சான்று விதை உற்பத்தி குறித்தான பயிற்சி அளிக்கப்பட்டது.

விதைப்பண்ணை அமைப்பது குறித்தான முக்கியத்துவத்தினை புதுக்கோட்டை மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் அங்ககச்சான்றளிப்பு உதவி இயக்குநர் ஜெகதீஸ்வரி, விதைச்சான்று நடைமுறைகள் குறித்தான பயிற்சியினை விதைச்சான்று அலுவலர் ஆமினாள் ஆகியோர் அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ராஜாமுகமது, உதவித் திட்ட அலுவலர்(வாழ்வாதாரம்) மற்றும் விதைச்சான்று அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Related Stories: