×

மழைநீர் வெள்ளமாக தேங்கிய டவுன் ரதவீதி ஓடைகளில் தோண்ட, தோண்ட மதுபாட்டில்கள்

நெல்லை, டிச. 2:  நெல்லை மாநகர பகுதிகளில் அடித்து நொறுக்கிய வடகிழக்கு பருவமழையால்  தாழ்வான பகுதிகளில் மட்டுமின்றி பிரதான சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. கடந்த 3 நாட்களாக நெல்லை டவுனில் பல தெருக்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதையடுத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. டவுன் தெற்கு ரதவீதி பகுதியில் நீர் தேங்கிய பகுதியில் உள்ள ஓடை மேல் சிலாப்புகளை அகற்றி பொக்லைன் உதவியுடன் உள்ளே நீரோட்டத்திற்கு தடையாக தேங்கியிருந்த ஆக்கிரமிப்பு குப்பை கழிவுகளை அகற்றினர். அப்போது அந்த ஓடைகளில் ேதாண்டத்ேதாண்ட மதுபாட்டில்கள் குவியல் குவியலாக வெளியே வந்தன.

அவை மட்டுமின்றி பிளாஸ்டிக் கப், கவர்கள், அட்டை கப்புகள், பாறை போன்ற பெரிய கற்கள், உள்ளிட்ட பிறகுப்பைகளும் வெளிப்பட்டன. அவற்றை எடுத்து குன்றுபோல் குவித்தனர். ஆக்கிரமிப்பு குப்பையில் மதுபாட்டில்களே அதிகம் இருந்தன. உடைந்த மற்றும் உடையாத முழுபாட்டில்கள் வீசப்பட்டு அவை நீரோட்டத்திற்கு தடையாக இருந்துள்ளன. மதுப்பிரியர்கள் இரவில் சாலையோரங்களில் குடித்துவிட்டு பாட்டில்களை பொறுப்பற்ற நிலையில் ஓடைகளில் வீசிச் சென்றுவிடுகின்றனர். இதுவே ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது என மாநகராட்சி அலுவலரகள் தெரிவித்தனர்.

Tags : Thonda ,Town Rathaveti ,
× RELATED உ.வே.சா 170வது பிறந்த நாள்...