நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காங். விருப்ப மனு விநியோகம்

நெல்லை, டிச. 2: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லையில் காங்கிரஸ் சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகம் நேற்று நடந்தது. நெல்லை மாநகர் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விருப்ப மனு படிவங்களை பெற்றுச் சென்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளுக்கு நேற்று விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் முன்னிலையில் விருப்ப மனு படிவங்கள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. நெல்லை மாநகராட்சி தேர்தலில் பல்வேறு வார்டுகளில் போட்டியிட நிர்வாகிகள் விருப்ப மனுக்கள் அளித்தனர்.

நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எம்ஏஎஸ். அப்துல்காதர், சிறுபான்மை பிரிவு தேர்தல் பொறுப்பாளர் அந்தோணி செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்ககுமார், துணை தலைவர்கள் உதயகுமார், குறிச்சி கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் உமாபதிசிவன், விவசாய அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வாகை கணேசன், மண்டல தலைவர்கள் கெங்காராஜ், 22வது வார்டு அய்யப்பன், முன்னாள் மண்டல சேர்மன் பாலசுப்பிரமணியன், 20வது வார்டு முகமது மைதீன்,

சிவாஜி பாலச்சந்தர், இளைஞர் காங்கிரஸ் ஜான் பிரகாஷ், ராமசுப்பு, ஆரோக்கியம், 53வது வார்டு அம்பிகா முத்துதுரை, வரகுணன், சிவராமகிருஷ்ணன், பண்ணை முகம்மது இஸ்மாயில், முகம்மது இக்பால், செல்லையா, சாகுல்ஹமீது, சேக் முகம்மது, மதார், சிக்கந்தர், சர்தார், பீர்மைதீன், ரகீம், தாதாபீர் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் கேபிகே ஜெயக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகளிடம் விருப்பமனு படிவம் விநியோகம் செய்யப்பட்டன. இதில் திசையன்விளை, நாங்குநேரி பேரூராட்சி மற்றும் அம்பை நகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நிர்வாகிகள் விருப்ப மனுக்கள் அளித்தனர்.

நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, விவசாய அணி மாநில செயலாளர் விவேக் முருகன், மாவட்ட மகளிரணி தலைவர் அமுதா கார்த்திகேயன், திசையன்விளை நகர செயலாளர் சங்கர், மாநில பேச்சாளர் மருதூர் மணிமாறன், நகர பொறுப்பாளர் விஜயகுமார், கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஐசக், தங்கையா கணேசன், நகர முன்னாள் தலைவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: