முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சிறப்பு முகாம்

நெல்லை, டிச. 2: நெல்லை அகர்வால் கண் மருத்துவமனையின் சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம், முன்னீர்பள்ளம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு கண்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான சிறப்பு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. விழி ஒளி ஆய்வாளர் இந்திர சுந்தரி, கண் நல ஆலோசகர் தாசன் ராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு கண்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

முகாமிற்கு முத்தமிழ் பள்ளி தலைவர் அமரவேல் பாபு, தாளாளர் ஜெயந்தி பாபு, முதல்வர் சோமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை முத்தமிழ் பள்ளி நிர்வாகிகள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: